Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மட்டும் அரசியல் கட்சிகள் பார்க்க கூடாது: மோடி



இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மட்டும் அரசியல் கட்சிகள் பார்க்க கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இஸ்லாமியர்களை யாரும் கொண்டாடவும் வேண்டாம், அவர்களை இழிவுபடுத்தவும் வேண்டாம் என்றும் குறிப்பிட்ட மோடி, இஸ்லாமியர்களை சக மனிதர்களாக பாருங்கள் என்றும் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய மக்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று ஜனசங்கின் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் உபத்யாயா, 50 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அத்துடன், அரசியல்வாதிகள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும், தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டியது குறித்து ஆலோசிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.