September 19, 2016
என்னை ஜாமீனில் எடுங்கள் ! நேற்று வழக்கறிஞரிடம் கெஞ்சிய ராம்குமார் !
ராம்குமார் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜன், பேட்டியளித்துள்ளார்.
அதில் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்தார்.
தன்னிடம் உணவால் ஏற்பட்ட பிரச்சனையால் மருத்துவமனையில் ராம் குமார் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து செய்தி வந்ததாகவும், இதனால் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு செல்வதாகவும், அதன் பிறகே முழுத் தகவல் தெரியும் என்றும் கூறினார்.
கழுத்தை அறுத்துவிட்டு, ராம்குமார் எப்படி தற்கொலைக்கு முயன்றார் என கூறினார்களோ அதே போலத்தான் இப்போதும் நடந்திருக்கும் என நம்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் நேற்று ராம்குமார் உடன் ஒரு மணி நேரம் பேசியதாகவும், அப்போது என்னை ஜாமீனில் எடுங்கள் என ராம்குமார் கூறியதாகவும், அவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.
என்னை ஜாமீனில் எடுங்கள் ! நேற்று வழக்கறிஞரிடம் கெஞ்சிய ராம்குமார் !
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.