September 27, 2016
தமிழக அதிகாரிகள் மீது கேரள போலீசாரின் தாக்குதல் வருத்தமளிக்கிறது: கேரள வனத்துறை
பரம்பிக்குளத்தில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது, கேரள போலீசார் நடத்திய தாக்குதல் வருத்தமளிப்பதாக கேரள மாநில வனத்துறையினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் பகுதியில் கடந்த 12-ம் தேதி மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மற்றும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.
இதில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, இன்று பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, இருமாநில வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை பராமரிக்கச் சென்றால் அவர்களை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை கேரள வனத்துறையினர் ஏற்றுக் கொண்டனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய கேரளா போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் கேரள போலீசாரின் தாக்குதலுக்கு அவர்கள் வருத்தமும் தெரிவித்தனர்.
தமிழக அதிகாரிகள் மீது கேரள போலீசாரின் தாக்குதல் வருத்தமளிக்கிறது: கேரள வனத்துறை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.