September 8, 2016
இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கிய பொதுமக்கள்!
மத்தியபிரதேசம் : கடையொன்றில் 200 ரூபாய் திருடியாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். பிந்த் மாவட்டத்தில் சுபம் எனும் இளைஞரை பொதுமக்கள் நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கியுள்ளனர். சதார் பஜார் பகுதியில் கடையொன்றில் அந்த இளைஞர் 200 ரூபாயை திருடும் போது கடைக்காரர் பார்த்துவிட்டு பிடித்துள்ளார். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் அந்த இளைஞரின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த இளைஞரிடம் திருடியதற்கான காரணம் கேட்டதற்கு சில தினங்களாக சாப்பிடவில்லை என்றும், சாப்பிடுவதற்காக திருடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கிய பொதுமக்கள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.