September 22, 2016
சொன்னதைக் கேட்காத விஜயகாந்த்.. பட்டென்று திமுகவில் சேர்ந்து விட்ட மாஜி தேமுதிக எம்.எல்.ஏ.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் கூறிய கருத்தை கேட்க மறுத்ததால் கோபமடைந்து ஒரு முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ திமுகவில் போய் இணைந்து விட்டார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்த அவர் கட்சியில் இணைந்து விட்டார். தேமுதிக வட்டாரத்தில் அருட்செல்வனின் ஜம்ப் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் என்ன விசேஷம் என்றால் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்த்திடம் சில கருத்துக்களைக் கூறியுள்ளார் அருட்செல்வன். அட அதெல்லாம் சரியா வராதுங்க என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார் போல.உடனே கோபித்துக் கொண்டு திமுகவுக்குப் போய் விட்டார் அருட்செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தனது கட்சியின் முன்ணியினருடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்த விவாதத்தின்போது மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ அருட்செல்வனும் கலந்து கொண்டு சில கருத்துக்களைக் கூறினாராம். ஆனால் அதை விஜயகாந்த் ஏற்கவில்லை.
இதையடுத்து இன்று தனது ஆதரவாளர்களான தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் த.லோ.பரமசிவம், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் வி.ஜெயபிரகாஷ் ஆகியோருடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் அருட்செல்வன்.
பரவாயில்லையே கட்சி தாவுவதற்கு எப்படியெல்லாம் ஐடியா கிடைக்குது பாருங்க நம்மாளுங்களுக்கு!
சொன்னதைக் கேட்காத விஜயகாந்த்.. பட்டென்று திமுகவில் சேர்ந்து விட்ட மாஜி தேமுதிக எம்.எல்.ஏ.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.