September 4, 2016
உள்ளாட்சி தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட வலியுறுத்தல்!
தமிழகத்தில் எல்லா கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிடவேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ள பெண் வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து பொன்.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது நரேந்திரமோடி அரசின் சாதனைகளை விளக்கி கூறி தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாறு வீடுவீடாக சென்று பொன்.ராதாகிருஷ்ணன் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் பாஜக சாதனை படைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் எல்லா கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிடவேண்டும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்
உள்ளாட்சி தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட வலியுறுத்தல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.