September 26, 2016
போலி என்கவுண்டர் புகார் – சென்னை கண்ணகி நகர் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை கண்ணகி நகர் காவல்நிலையத்தில் நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று புகுந்து பெட்ரோல் குண்டுகள் வீசியதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 -மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாமபாலாகின.
சமீபத்தில் துரைப்பாக்கம், -கண்ணகி நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட வாலிபர் இறந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் உறவினர்கள் முற்றுகையிட்டனர். (http://www.thoothuonline.com/archives/77522)
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தது. அக்கும்பல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது..
இதில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு காவலர்கள் வருவத்ற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன், போலீசாரும் சேர்ந்து தீயை அணைத்தனர். 10 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதம் அடைந்த மோட்டார் சைக்கிள்களில் 5 போலீசாருக்கு சொந்தமானது என்று தெரிகிறது. மற்றவை எல்லாம் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.
போலி என்கவுண்டர் புகார் – சென்னை கண்ணகி நகர் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.