September 19, 2016
'ரஷ்யாவில் ரத்த சிவப்பாக நிறம் மாறிய ஆறு!' : அதிகாரிகளால் விளக்க முடியாததால் மக்கள் பீதி
ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, ரஷ்ய சுற்றுச்சூழல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆற்றின் நிற மாற்றத்திற்கான அறிவியல் பூர்வமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அருகில் உள்ள தொழிற்சாலைகள் மீது மக்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.
தொழிற்சாலை குழாயில் உடைப்பு ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அதன் காரணமாக இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என ரஷ்ய சுற்றுச்சூழல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டால்டிகான் ஆறு செல்லும் நோரில்ஸ்க் நகரம் ரஷ்யாவின் முக்கிய தொழில்மயமான நகரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தங்கள் கண்ணெதிரே ஒய்யாரமாய் நடைபோட்டுச் சென்றுக் கொண்டிருந்த நதியானது திடீரென குரூரமான வகையில் நிறம் மாறியிருப்பது அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.
'ரஷ்யாவில் ரத்த சிவப்பாக நிறம் மாறிய ஆறு!' : அதிகாரிகளால் விளக்க முடியாததால் மக்கள் பீதி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.