Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

கோவை வன்முறையில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க வெள்ளையன் கோரிக்கை



கோவையின் பாதுகாப்பு நிலைமை குறித்துக் கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், வாகனங்கள் சேதமடைந்தன. காவல்துறை வாகனங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

இதையடுத்துக் கோவையில் சுமார் 3ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மசூதிகள், கோவில்கள், தேவாலாயங்கள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையின் பாதுகாப்பு நிலைமை குறித்து மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில்  கூடுதல் காவல்துறை இயக்குநர் திரிபாதி தலைமையில் ஆலோசனை நடத்தபட்டது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் லட்சுமி, காவல் கண்காணிப்பாளர் ரம்ய பாரதி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெள்ளையன் கோரிக்கை:

கோவையில் வன்முறையில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின்போது மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. துடியலூரில் பல வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன் ஐம்பதுக்கு மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டன.

இதனால் வணிகர்களுக்குப் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் துடியலூரில் வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட கடைகளைப் பார்வையிட்டு வணிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.