Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 2, 2016

தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!



தூத்துக்குடியில் தேவாலயத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பள்ளி ஆசிரியையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த நீயூமன் என்பவரது மகள் பிரான்ஸினாவை நேற்று கிறிஸ்துவ தேவாலயத்திற்கு புகுந்து, கீகன் ஜோஸ் கோமஸ் என்பவர் வெட்டிப்படுகொலை செய்தார்.

கீகன், பிரான்சினாவை ஒருதலையாக காதலித்து  வந்ததாகவும், ஆனால்  இந்த காதலை பிரான்ஸினா ஏற்க மறுத்ததால் ஏமாற்றத்துடன் கீகன் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரான்ஸியானாவிற்கு வரும் 8 தேதி திருமணம் நடைபெறவுள்ளதை அறிந்த கீகன் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றினார். பின்னர், கீகன் மணல் தெருவிலுள்ள ஒருவீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரது உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரான்சினாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரான்சினாவின் சகோதரர் வெளிநாட்டில் இருந்து சனிக்கிழமை வருவதால் அன்று மாலையில்  பிரான்சினாவின் உடலை அடக்கம் செய்யவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.