September 28, 2016
சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
கோவையில் இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரது இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தததால் கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சசிக்குமார் கொலை செய்யப்பட்டதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கொலையாளிகளை கைது செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கை கோவை போலீசார் விசாரித்து வந்த நிலையில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.