September 30, 2016
நண்பனின் மரணத்தால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே நண்பனின் மரணத்தை தாங்க முடியாத இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூசாபேட் எனும் பகுதியருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐ.டி ஊழியர் ஹரிகிருஷ்ணன்(27), சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் கச்சிபவ்ளியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில், இவரது நண்பர் ரமேஷ்(23) நிஜாமாபாத் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூசாபேட் அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த இருவரும் முன்னே சென்ற டிரக்கை முந்த வாகனத்தை வேகமாக செலுத்தியுள்ளனர். அதில் வாகனத்தை ஒட்டிய ரமேஷ் நிலைதடுமாறி சாலை தடுப்பின் மீது மோதிய விபத்தில் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நண்பரின் மரணத்தை கண்ணெதிரே கண்ட ராமேஷ் அங்கிருந்து ஓடிச் சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இருவரது உடலும், அவர்ளது சொந்த ஊரான குண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இருவருக்கும் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பனின் மரணத்தால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.