டெல்லியில் ஆசிரியை ஒருவரை 24 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொலையாளி போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் கருணா(21) என்ற ஆசிரியரை சுரேந்தர் சிங் என்பவர் பலருக்கும் மத்தியில் கத்தியை கொண்டு 24 முறை குத்திக் கொடூரமாக தாக்கி கொலை செய்தான். இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் சுரேந்தர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது சுரேந்தர் சிங் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளான். விசாரணையில், கடந்த 2012 ஆம் ஆண்டுகளில் இருந்தே தானும் கருணாவும் ஒன்றாக பழகி வந்ததாகவும், ஒரு வருடத்திற்கு முன்னர் தான் தாங்கள் இருவரும் பிரிந்ததாகவும் கூறியுள்ளான்.
அண்மையில் கருணா, மோகித் என்பவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்தேன். இதனால் கருணாவின் பேஸ்புக் பக்கத்தை ஹேக்செய்து பார்த்த போது, அதில் இருவருடைய அந்தரங்க உரையாடல்களை கண்டு தான் அதிர்ச்சி அடைந்தேன்.
இதனால் ஆத்திரமடைந்து கருணாவை நேரில் பார்த்து கண்டித்தேன். தன் ஆத்திரத்தை அடக்கமுடியாத காரணத்தினால் அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து தாக்கினேன். அது கருணாவின் பையில் விழுந்தது.
அப்போது கருணா இதைக்கூட சரியாக பிடிக்க தெரியவில்லை, நீ எல்லாம் என்ன செய்யப்போகிறாய் என கிண்டல் அடித்தார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நான், அவரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பல முறைத் தாக்கி குத்தி கொடூரமாக கொலை செய்ததாக சுரேந்தர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளான்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.