Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

தினமும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பேஸ்புக் பாவனையாளர்கள் மரணம்!



ஒவ்வொரு நாளும் உலகின் மொத்த சனத்தொகையில் 150,000 க்கும் அதிகமானோர் மரணமடைகின்ற நிலையில், இவர்களில் ஆகக்குறைந்தது 10,300 பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (Source: Theloop)
இது தவிர பேஸ்புக் குறித்த மேலும் சில புள்ளிவிபரங்கள்:
உலகெங்கும் 1.71 பில்லியன் பேர் ஒவ்வொரு மாதமும் பேஸ்புக் பயன்படுத்தும் அதேநேரம் 1.13 பில்லியன் பேர் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகின்றனர்.(Source: Facebook as of 7/27/16)
பேஸ்புக்கில் 83 மில்லியன் Fake Profiles-போலிக்கணக்குகள் உள்ளன.(Source: CNN)
தினமும் 300 மில்லியன் போட்டோக்கள் பேஸ்புக்கில் பதிவேற்றப்படுகின்றன.(Source: Gizmodo)
18-24 வயதான பேஸ்புக் பாவனையாளர்களில் 50 வீதமானவர்கள் காலை எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை தமது பேஸ்புக்கைப் பார்வையிடுவதுதான்.(Source: The Social Skinny)
பேஸ்புக்கில் ஒவ்வொரு நிமிடமும் 510 Comments பதிவிடப்படும் அதேநேரம் 293,000 Status Update செய்யப்படுகின்றன.(Source: The Social Skinny)
ஒப்பீட்டளவில் அதிகளவானோர் பிற்பகல் 1-3 மணிவரையான காலப்பகுதிக்குள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். (Source: Bit.ly blog)
பலர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே அதிக நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுகின்றனர்.(Source: Bit.ly blog)
இந்தப் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 10 பேஸ்புக் பாவனையாளர்கள் மரணித்திருப்பார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.