September 11, 2016
விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை தூண்ட முயற்ச்சி : இரு இந்துத்துவ அமைப்பிகளிடையே மோதல்
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதி பூக்கார கடைத் தெருவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சிலை வைத்து வருகிறார்கள் .
இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பிலிருந்த முக்கிய பிரமுகரான ஜோதீஸ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த அமைப்பிலிருந்து விலகி இந்து மக்கள் கட்சியில் சேர்ந்தார்.
இதையடுத்து இந்த ஆண்டு அந்த கடைத்தெருவில் விநாயகர் சிலை வைப்பதில் இரு அமைப்பினருக்குமிடையே போட்டி ஏற்பட்டது. இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீசார் இரு தரப்பினரும் அந்த இடத்தில் சிலை வைக்கக் அனுமதியில்லை எனக்கூறி தடை விதித்தனர்.
பின்னர், இந்து முன்னணியினர் அங்கு வைப்பதற்காக 10 அடி உயரத்திலுள்ள விநாயகர் சிலையை கொண்டு வந்து வைத்தனர். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதட்டம் நீடித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து அங்கு தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இந்த இரு அமைப்பினரும் வருட வருடம் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் ஆதலால் இந்த இரு அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை தூண்ட முயற்ச்சி : இரு இந்துத்துவ அமைப்பிகளிடையே மோதல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.