Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 10, 2016

மொபைல் போனை சார்ஜ் செய்ததால் தீயில் எரிந்த கார்!


காரில் சாம்சங் காலக்சி நோட் 7 மொபைல் போனை சார்ஜ் செய்த போது, கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் ஆச்சரியதை ஏற்படுத்தியுள்ளது.

Nathan Dornacher, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர், அவர் தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றினை செய்துள்ளார், அதில் “கடையிலிருந்து வாங்கி வந்த மேஜை ஒன்றினை எனது குடும்பத்தினருடன் காரில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தேன், அச்சமயம் கார் இயங்கிக்கொண்டிருந்தது, அதில்  சாம்சங் காலக்சி நோட் 7 சார்ஜ்ஜில் இருந்தது, திரும்பி வந்து பார்த்த போது எனது கார் எரிந்துகொண்டிருந்தது”.

இப்பதிவு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி 7 நோட் ஃபோன்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக விற்பனையாகி வந்தன. இந்நிலையில், ஃபோன்களை சார்ஜ் செய்யும் போது அதிக வெப்பமாகி பேட்டரிகள் வெடிப்பதாக பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிரான விமர்சனங்களைப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாடல் ஃபோன்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த ஃபோன்களை திரும்பப் பெற சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.