கர்நாடகத்தில் காவிரி போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. பெங்களூருவை அடுத்து மைசூரிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதால் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்பட மாநிலம் முழுவதும் காலையில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் காவிரி போராட்டம் தீவிரமாகியது. போராட்டம் வன்முறையாக வெடித்து உள்ளது.
கர்நாடகாவில் தமிழகர்களின் கடைகள், வாகனங்கள் குறிவைத்து தாக்கப்படுகிறது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தமிழகத்தை சேர்ந்த 44 லாரிகள் மற்றும் 2 காருக்கு தீ வைக்கப்பட்டது. பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்த தனியார் பேருந்துகள் 40 தீ வைத்து எரிக்கப்பட்டது. பெங்களூருவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் நகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் மைசூரிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மைசூரில் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில் மாநிலத்திற்கு கூடுதல் படையை அனுப்ப மத்திய அரசுக்கு சித்தராமையா கோரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதிஉள்ளார். இதற்கிடையே வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று காவல் துறை கோரிக்கை விடுத்து உள்ளது. மேலும், காவல் துறைக்கு சொந்தமான சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களே உண்மையானவை என்று கூறிஉள்ளது. இதற்கிடையே பெங்களூருவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் மூவர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.