அமெரிக்காவில் நியூயார்க் நகரில் செல்சீ பகுதியில் கடந்த 17–ந் தேதி மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 29 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் தொடர்புடையவர் என 28 வயதான அகமது கான் ரஹாமி என்பவரின் படத்தை டி.வி. சேனல்களில் காட்டி, போலீசார் தேடினர்.
இதற்கிடையே அந்த ரஹாமி, லின்டன் என்ற இடத்தில் உள்ள மது பார் ஒன்றில் குடித்து விட்டு அதன் வாசல் அருகே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
முதலில் அவர் யாரோ ஒரு குடிகாரர், குடிபோதையில் மயங்கி தூங்கி விட்டார் போலும் என்று அந்த பாரின் உரிமையாளரான ஹரிந்தர் பெயின்ஸ் பார்த்து விட்டு, தனது மற்றொரு பாருக்கு சென்று விட்டார். அங்கு அவர் தனது மடிக்கணினியில் டி.வி. செய்தி பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதில் நியூயார்க் குண்டுவெடிப்பை நடத்தியவர் என காட்டப்பட்ட பயங்கரவாதியின் படம், தனக்கு சொந்தமான பாரின் வாயிலில் குடிபோதையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவர்தான் என்பதை கண்டுகொண்டார்.
உடனே அவர் போலீசை தொலைபேசியில் அழைத்து, ‘‘நியூயார்க் குண்டுவெடிப்பில் நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற பயங்கரவாதி எனது பாரின் வாசலில் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருக்கிறார், உடனே வாருங்கள்’’ என தகவல் தெரிவித்தார். போலீசாரும் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்களைப் பார்த்ததும் விழித்து, சுதாரித்த ரஹாமி அவர்கள் மீது தனது கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டம் பிடித்தான். அந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.
ஆனால் அவனை மற்ற போலீசார் விடாமல் துரத்திச்சென்றனர். அவன் சிக்காமல் தொடர்ந்து ஓடியபோது துப்பாக்கியால் அவன் மீது சரமாரியாக சுட்டனர். இதில் அவன் சரிந்து கீழே விழுந்த உடன் அவனை கைது செய்தனர். அவனைப் பிடிக்க உதவிய மது பார் உரிமையாளர் ஹரிந்தர் பெயின்ஸ், இந்திய வம்சாவளி சீக்கியர் ஆவார். அவருக்கு பாராட்டு குவிகிறது.
ஆப்கானிஸ்தானில் பிறந்த ரஹாமி, பாகிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த குவெட்டா நகருக்கு சென்று வந்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.