Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 11, 2016

ஆசியா– ஐரோப்பாவை இணைக்கும் பிரம்மாண்ட பாலம்!


ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும்வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உலகின் மிக அகலமான புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தொங்கு பாலத்தை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சமீபத்தில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார்.

இந்தப் பாலத்துக்கு 16–ம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கி மன்னர் யாயூஷ் சுல்தான் சலீம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் மூலம் துருக்கி, ஐரோப்பாவுக்கு இடையிலான வர்த்தகம் மேம்படும் என்பது அந்நாட்டவர்களின் நம்பிக்கை.

ரூ. 20 ஆயிரத்து 100 கோடி செலவில் 3 ஆண்டு காலத்தில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1.4 கி.மீ. நீளம், 59 மீட்டர் அகலம், 322 மீட்டர் உயரம் கொண்டதாகும்.

இதில் 8 வழிச் சாலைகள், 2 ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த சாலை– ரெயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.