September 30, 2016
கோவை: 3 வீடுகள் மீது மர்மநபர்கள் கெரசின் குண்டுகள் வீச்சு
கோவை: பொத்தனூர் பகுதியில் 3 வீடுகள் மீது மர்மநபர்கள் கெரசின் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்த சசிகுமார், இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 22ஆம் தேதி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவை முழுவதும் கலவரம் வெடித்தது. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
சசிகுமார் கொலை பற்றி விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சசிகுமாரின் மனைவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பொத்தனூர் பகுதியில் உள்ள 3 வீடுகளில் மர்மநபர்கள் கெரசின் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். இதில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: 3 வீடுகள் மீது மர்மநபர்கள் கெரசின் குண்டுகள் வீச்சு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.