September 28, 2016
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!
வேலூர் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த வீரராகவன் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ், தினேஷ் என்ற இரண்டு மகன்களும் இருந்தனர்.
இந்நிலையில் கடன் தொல்லை காரணமாக நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் வீரராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ், தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
மனைவி ஈஸ்வரிக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.