டில்லி நகர சாலையில், பட்டப் பகலில், 21 வயது இளம்பெண்ணை, 30க்கும் மேற்பட்ட முறை, கத்தியால் குத்திக்கொன்ற நபரை, பொதுமக்கள் பிடிக்காமல் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி மாநகரின், பரபரப்புமிக்க புராரி பகுதியில் நேற்று, பள்ளி ஆசிரியை கருணா, 21, நடந்து சென்றார். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுரேந்தர், 34, கருணாவை வழிமறித்து நிறுத்தினான்.
கல்லால் தாக்குதல்
அவன், மறைத்து வைத்திருந்த கத்தியால்
கருணாவை சரமாரியாக குத்தினான். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த, கருணாவின் உடலில்அசைவு நிற்கும் வரை, கத்தியால் குத்திய சுரேந்தர், ஆத்திரம் தீராமல், பக்கத்தில் இருந்த பெரிய கல்லை எடுத்து, கருணாவின் தலையில் ஓங்கி அடித்தான்; சில வினாடிகளில், கருணா உயிரிழந்தார்.
அதன்பின், அவரது உடலை காலால் ஆத்திரத் துடன் எட்டி உதைத்த சுரேந்தர், சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், தான் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றான்.
இந்த சம்பவம், பரபரப்பு மிக்க சாலையில் நடந்துள்ளது. சாலையில் நடந்துசென்ற பலர், கொலைகாரனை தடுக்க முற்படாமல், அவரவர் வேலையை பார்த்தபடி சென்றனர்.
கேமராவில் பதிவு
இந்த காட்சிகள் அனைத்தும், அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தன. இதையடுத்து, சுரேந்தரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சுரேந்தர், தன் மனைவியை
விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்திருப்பதும், பல மாதங்களாக கருணாவை பின் தொடர்ந்து தொல்லை தந்ததும் தெரிய வந்தது. இந்தாண்டு துவக்கத்தில், கருணாவின் பெற்றோர், சுரேந்தர் மீது போலீசில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.