September 26, 2016
கல்லூரி மாணவி உள்பட 10 பேரை காதலித்து ஆபாச படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட காதல் மன்னன்!!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பெண்ணின் தாயார் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், சாமுவேல் என்ற இளைஞர் என் மகளை காதலிப்பதாக சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்துள்ளார். பின்னர் எனது மகள் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால், கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதேபோனற ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது ‘பேஸ்புக்’கில் வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சிந்தாதிரிபேட்டை மகளிர் போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் சாமுவேல் வசித்த மயிலாப்பூர் வீட்டில் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது. அவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை தன்னுடைய காதல் வலையில் விழவைத்து உல்லாச லீலைகளில் சாமுவேல் ஈடுபட்டிருக்கலாம் எனவும், சாமுவேல் பிடிபட்டால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கல்லூரி மாணவி உள்பட 10 பேரை காதலித்து ஆபாச படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட காதல் மன்னன்!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.