Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 29, 2016

பஞ்சாப் எல்லையில் தொடரும் பதற்றம்..! பொங்கிய எழுந்த இந்திய வீரர்கள்


எல்லையில் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 9 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதமர் மோடி, அவசரமாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இதனிடையே, பஞ்சாபில் சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதால் போர் பதற்றம் நிலவி வருகிறது.

காஷ்மீர் மாநிலம் 'உரி'யில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 18ஆம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்த தகுந்த சமயம் பார்த்துக்கொண்டு இருந்தது.இதனிடையே, காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நேற்றிரவு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அப்போது, இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதனை உயர் ராணுவ அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார்.

இந்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு விவகார கமிட்டி கூட்டத்தை இன்று கூட்டினார். இதில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கி சூடு மற்றும் எல்லைப் பகுதி நிலவரம் குறித்தும் தகுந்த பதிலடி கொடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 4 மணியளவில் அவசர கூட்டமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதனிடையே, பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், எங்கள் நாட்டு மக்களை காக்க நாங்களும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானும் தயார் என அந்நாட்டு அரசு கூறியுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது எல்லையில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனிடையே வாகா எல்லையில் வழக்கமாக நடைபெறும் கொடி மரியாதையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

எல்லையில் பள்ளிகளை மூட உத்தரவு

இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூட மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எல்லையில் இருந்த 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.