Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 4, 2016

அதிரடி சலுகை அளிக்கும் Vodafone!



தொழில் போட்டி காரணமாக 67% அளவிற்கு கூடுதல் டேட்டா வழங்குவதாக வோடபோன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வோடபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..
650 ரூபாய்க்கு 3G/4G plan-ல் முன்னர் வழங்கப்பட்ட 3GBக்கு பதிலாக தற்போது அதிரடியாக 5GB வழங்கப்படுகிறது.
இதேபோல, 449 ரூபாய்க்கு 3G/4G plan-ல் முன்னர் வழங்கப்பட்ட 2GBக்கு பதிலாக தற்போது அதிரடியாக 3GB வழங்கப்படுகிறது.
மேலும்,  999 ரூபாய் பிளானில் 10GB டேட்டா வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், 39 ரூபாய் மதிப்பிலான 2G sachet pack-ல் முன்னர் வழங்கப்பட்ட 160MBக்கு பதிலாக தற்போது 222MB வழங்கப்படுகிறது.
அதேபோல, 12 ரூபாய் மதிப்பிலான ஒரு நாள் Validity-யுடன் கூடிய 3G/4G sachet pack-ல் முன்னர் வழங்கப்பட்ட 30MBக்கு பதிலாக தற்போது 60MB வழங்கப்படுகிறது.
வோடபோன் வாடிக்கையாளர்கள் மொபைல் டேட்டா உபயோகிப்பதை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், மொபைலில் குறைவாக டேட்டா உபயோகிக்கும் வாடிக்கையாளார்களை கவரவும், இத்திட்டம் உதவும் எனவும் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் டெலிகாம் சர்க்கில்களுக்கு ஏற்ப திட்டங்கள் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூலை மாதம் ஏர்டெல், ஐடியா நிறுவனங்களும் டேட்டா கட்டணங்களை வெகுவாக குறைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி காரணமாக தற்போது வோடபோன் நிறுவனமும் அதிரடி சலுகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.