பொழுது போக்குகளுக்காக பல ஆயிரம் ரூபாய்களை யோசிக்காமல் அள்ளித் தெளிக்கும் அளவுக்கு நுகர்வு கலாசாரம் தலைவிரித்தாடும் இதே சமூகத்தில்தான், வெறும் 4,380 ரூபாய் பள்ளிக் கட்டணம் கட்ட முடியவில்லை, என்பதற்காக ஒரு இளம் குருத்து தன் வாழ்வை முடித்துக்கொண்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது.
கொடைக்கானலைச் சேர்ந்த ராஜேஷ்வரனுக்கு அப்பா இல்லை. ஹோட்டலில் கூலி வேலை பார்க்கும் அம்மா மட்டும்தான். கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்தாலும் மகனை, படிக்க வைத்து சமூகத்தில் மதிப்புமிக்க மனிதனாக ஆக்க வேண்டும் என போராடிய அந்த தாயின் கனவில் அமிலம் ஊற்றி இருக்கிறது, ஏழ்மை.
ராஜேஷ்வரன் கொடைக்கானலில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வந்தார். பணம் இல்லாததால், இந்தாண்டுக்கான பள்ளிக் கட்டணம் 4,380 ரூபாய் கட்ட முடியாத சூழலில், வழக்கம் போல, நேற்று காலை பள்ளிக்கு சென்றிருக்கிறார்.
பள்ளி பிரேயரில் மற்ற மாணவர்களுக்கு முன்பாக பாக்கித் தொகையை கட்டச் சொல்லி அவமானப்படுத்தியதாக சொல்கிறார்கள். வகுப்புக்கு சென்ற பின்பு, அங்கு வந்த ஆசிரியை ஒருவர், ‘‘பணம் கட்ட முடியலைனா. நீயெல்லாம் ஏன் பள்ளிக்கு வரணும். வேலை வெட்டிக்கு போக வேண்டியதுதானே...? வகுப்பை விட்டு வெளியே போ. பணம் கட்டுன பிறகுதான் உள்ளே வரணும்....’’ என வார்த்தைகளை உதிர்த்ததாக சொல்லப்படுகிறது.
மற்ற மாணவர்கள் முன்பாக ஏற்பட்ட அவமானத்தால் அழுதபடி, தலைகுனிந்து கொண்டே வீட்டுக்கு வந்த ராஜேஷ்வரன், மீண்டும் மீண்டும் அம்மாவை கஷ்டப்படுத்த விரும்பாமல் தனது வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது உலகமே மகன் என்று வாழ்ந்து வந்த அந்த ஏழைத் தாய், மகனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் பிரமை பிடித்துப் போயிருக்கிறார். இந்நிலையில், 'பள்ளி மீது நடவடிக்கை எடுக்காமல் பிணத்தை வாங்க மாட்டோம்', என ராஜேஷ்வரனின் உறவினர்கள், கொடைக்கானல் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
எத்தனையோ அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள், தொண்டு உள்ளங்கள் வாழும் நாட்டில் கல்வி கட்டணம் கட்டமுடியாமல் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். கல்விக்கூடங்களே, கல்வி முக்கியம்தான்..அதை விட கருணை மிக முக்கியம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.