ஒரு பெண்ணை 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் கூட தண்டனைக்குரிய குற்றமென என கேரள கலால் வரித்துறை ஆணையர் பேசியிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.
கொச்சியில் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர், ''நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கின்றது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது.
இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் தரக்குறைவாக பேசினாலோ அல்லது தகாத முறையில் நடந்தாலோ பெண்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க பெண்கள் சரியான சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்'' என பேசினார்.
ஆணையரின் இந்த பேச்சு ஆண்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் அவரிடம் சராமாரிக் கேள்விகளை தொடுத்து வருகின்றனர். ''ஒரு பெண்ணை 13 விநாடிகள் மட்டும் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்கிறோம். பின்னர் மீண்டும் 13 விநாடிகள் பார்க்கிறோம். அப்போ சட்டம் என்ன சொல்லுது' எனவும், 'ஆண்கள் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியும்'' என்றும் அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். ''அடுத்த முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது டைமர் வைத்துக் கொண்டு பேசுகிறேன். இல்லையென்றால், எனக்கு சிக்கல்கள் வரும்'' என இன்னொரு நெட்டிசன் கூறுகிறார். இப்படி கலால் வரித்துறை ஆணையரின் பேச்சு கேரளாவில் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜனும் பங்கேற்றார். ''இப்படி ஒரு சட்டமே இல்லை. கலால் வரித்துறை ஆணையர் சட்டத்தில் இல்லாத ஒன்றை பேசி உள்ளார்'' என ஆணையருக்கு எதிரான கருத்தை முன் வைத்துள்ளார்.
சட்ட வல்லுநர் உதயபானு கலால் வரித்துறை ஆணையரின் கருத்து குறித்து கூறுகையில்,'' வெறுமனே ஒரு பெண்ணை உற்று நோக்கினால் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை. பெண்களை வார்த்தைகளால் புண்படுத்தினாலோ அவர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்தாலோ இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வழியிருக்கிறது'' என தெரிவித்துள்ளர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.