சாக் ஷி மலிக்.... இந்த பெயருக்கு பின்னாலேயே ஒரு வீர வரலாறு இருக்கிறது. உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஜாட் பிரிவு மக்கள் வசிக்கின்றனர். ஜாட் இனத்தின் ஒரு உட்பிரிவே மலிக் அல்லது மாலக் என்பவர்கள். ராஜபுத்திரப் படையினருக்கும் ஜாட் இனத்தவருக்கும் ஒரு முறை போர் ஏற்பட்டது. ராஜபுத்திரப் படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். ஜாட் படையினரால் ராஜபுத்தர படையினரை சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களை ஒதுங்கியிருக்க வைத்து விட்டு, சொற்ப அளவு வீரர்களே இருந்த மாலக் படையினர் . ராஜபுத்திரர்கள் படையை தோற்கடித்தனர். . மாலக் படையில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் போரிட்டதாக கே.சி. யாதவின் 'ஹரியானா வரலாறு' என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது
அப்படிப்பட்ட வீரம் விளைஞ்ச மண்ணில் இருந்து கிடைச்ச பொண்ணுதான் இந்த சாக்ஷி. ரியோ ஒலிம்பிக் போட்டியில், நாட்டுக்காக முதல் பதக்கம் வென்று தந்தவர். ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. ஹரியானாவில் உள்ள ரோக்டக் மாவட்டத்தில் உள்ள மோக்ரா என்ற கிராமம்தான் சாக்ஷியின் சொந்த ஊர். தந்தையும் தாயும் அரசு ஊழியர்கள். நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த சாக்ஷியின் தாத்தா பத்துலு ராமும் ஒரு ரெஸ்லர்தான். தாத்தாவின் கரம்பிடித்து நடந்த பேத்திக்கும் மல்யுத்த ஆசை வந்து விட்டது.
மல்யுத்தம் 'ஆண்கள் விளையாட்டு ' என பெற்றோர் சொல்லிப் பார்த்தனர். சாக்ஷி கேட்கவில்லை. தனது முடிவில் உறுதியாக இருந்தார். தாத்தாவின் ரெஸ்லிங் ஆட்டம் சாக்ஷியின் மனதிற்குள் விதையாக விழுந்து கிடந்தது. இனி பேசிப்பயனில்லை என பெற்றோர் உணர்ந்தனர். ஈஷ்வர் தாகியா என்ற மல்யுத்த பயிற்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டார் 12 வயது சாக்ஷி. இங்கே பிரச்னை வேறு வழியில் வந்தது. ஈஸ்வர் தாஹியாவுக்கு வேறு சிஷ்யைகள் இல்லை. அதனால், தனது சிஷ்யர்களுடன்தான் சாக்ஷியை மோத விடுவார் தாஹியா. சாக்ஷி பட்டையை கிளப்பி விட... ஒரு பெண் ஆணை அடிப்பதா...? அப்படினு உடனே எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் சாக்ஷியோ, அவரது பயிற்சியாளரோ எதிர்ப்புகளுக்கு மசியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மல்யுத்தத்தை பிசிறு விடாமல் கற்றார் சாக்ஷி. உள்ளுர் முதல் உலகம் வரை பல வெற்றி குவிந்தது. ஊரார் வாய் அடங்கியது. 'ரெஸ்லிங் விளையாடுற உனக்கு காது 'காலிபிளவர்' மாதிரி பெரியதாக ஆகப் போகுது... உன்னலாம் யார் கட்டிக்குவானு கிண்டலடித்தனர்.' இந்த கேலிப் பேச்சுவெல்லாம் சாக்ஷியின் காதுக்குள் ஏறவே இல்லை. அதையும் தாண்டி ஒலிம்பிக் வரை சென்று பதக்கத்தையும் வென்று வந்து விட்டார். ஊராரால் கேலிக்குள்ளான அதே சாக்ஷிதான் மோக்ரா என்ற கிராமத்தையே இந்தியாவுக்கு அடையாளம் காட்டியும் உள்ளார்.
இந்த நிலையில், தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார் 23 வயது சாக்ஷி. கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் 'ஆனந்த பசார் ' பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், '' எனது வருங்கால கணவரின் பெயரை ரகசியமாக வைத்துள்ளேன். திருமணம் எனது ரெஸ்லிங் பயிற்சியை எந்த விதத்திலும் பாதிக்காது. ரியோ ஒலிம்பிக்கில் நான் தங்கம் வெல்ல அவர் எனக்கு உதவியாக இருப்பார். ரொம்ப சப்போர்ட்டிவ் டைப் அவர். எனது கனவுதான் அவரது கனவும். திருமணத்திற்கு பிறகு எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைப்பார் '' என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.