ஏடிஎம்களில் பணமெடுக்கும் போது ஸ்கிம்மிங் எனும் முறையால் ஒருவரின் ஏடிஎம் கார்டுகள் குறித்த தகவல்களைத் திருட முடியும். இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
முதலில் ஸ்கிம்மிங் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளலாம். ஏடிஎம் மையங்களில் கார்டுகளை தேய்க்கும் இடத்தில் அதேபோல ஒரு கருவியைப் பொறுத்தி அதன்மூலம் கார்டுகளின் விபரங்களைத் திருடும் முறையே ஸ்கிம்மிங் எனப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இதே ஸ்கிம்மிங் முறையைப் பயன்படுத்தி 20-க்கும் மேற்பட்டோரின் கணக்குகளில் இருந்து ரூ.4 லட்சத்துக்கும் அதிகமான பணம் திருடப்பட்டுள்ளது. இந்தவிவகாரத்தில் வெளிநாட்டினர் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால், சர்வதேச போலீசாரின் உதவியை கேரள போலீசார் நாடியுள்ளனர்.
மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள்:
ஏடிஎம் கார்டுகளைத் தேய்க்கும் இடத்தில் பசை போன்று ஏதேனும் தேய்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால், அந்த ஏடிஎம் மையத்தினை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ஏடிஎம் இயந்திரத்தின் கார்டுகளைத் தேய்க்கும் பகுதி நிறம் மாறியோ அல்லது சிறிது சாய்ந்தோ சந்தேகத்தைக் கிளப்பும் வகையிலேயோ இருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் உடனடியாகப் புகார் தெரிவிக்கவும்.
இயந்திரத்தில் எண்களைப் பதிவு செய்யும் கீபேட் பகுதி வினோதமாக பஞ்சு போன்ற தன்மையுடன் இருந்தால், நீங்கள் ஏமாற்றப்படலாம் விழித்துக் கொள்ளுங்கள்.
ஏடிஎம் இயந்திரத்தில் ரகசியக் குறியீடு எண்ணைப் பதிவு செய்யும்போது உங்களின் பின்னால் யாரும் இல்லையென்றாலும், கீபேடைக் கையால் மறைத்தபடியே பதிவிடவும். அதேபோல, ஏடிஎம் கார்டினையும் ரகசிய பதிவெண்ணையும் ஒன்றாக இணைத்து வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.