பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட புத்தகத்தை தடை செய்யக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வந்தனர் பா.ஜ.கவினர். அவர்களுக்கு பதிலடியாக மாணவர்களும் போராட்டக் களத்தைத் தீவிரப்படுத்த, வேறு வழியில்லாமல் மாணவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.
கல்வி நிலையங்களில் நடந்த மாணவர் போராட்டங்கள், தற்கொலைகள் உள்ளிட்டவற்றைத் தொகுத்து, வைடர்ஸ்டேண்ட்' என்ற தலைப்பில் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த மாணவர் போராட்டங்களையும் ரோகித் வெமுலாவின் மரணம் தொடங்கி அனைத்து விஷயங்களையும் தொகுத்திருந்தனர். ' மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும்' என பா.ஜ.கவினரும் ஏ.பி.வி.பி அமைப்பினரும் தொடர்ந்து போராடி வந்தனர்.
அதற்கேற்ப, வைடர்ஸ்டேண்ட் புத்தகத்தின் மூன்றாயிரம் பிரதிகள் அடங்கியிருந்த அறைக்கு சீல் வைத்தது பல்கலைக்கழக நிர்வாகம். வைடர்ஸ்டேண்ட் புத்தகத்தின் முதன்மை ஆசிரியராக இருந்த மாணவர் நலன் துறைத் தலைவர் மூர்த்தியை, பதவியைவிட்டே நீக்கிவிட்டனர். இதனால் கொந்தளித்துப் போன மாணவர்கள், அகில இந்திய அளவில் மாணவர் அமைப்பிகளின் உதவியை நாடினர். கோழிக்கோடு பல்கலைக்கழகம் முதல் பெரும்பாலான பல்கலைக்கழங்களில் வைடர்ஸ்டேண்ட் புத்தகத்திற்கான தடையை நீக்குமாறு குரல் எழுப்பினர்.
நேற்று(ஞாயிறு)மாணவர் பிரநிதிகளை அழைத்துப் பேசிய புதுவை முதல்வர் நாராணயசாமி, ' கருத்துரிமை நசுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தால் மட்டுமே, மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இதுகுறித்து ஐ.ஜியிடம் அறிக்கை கேட்கிறேன்' என மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். தொடர்ந்து சர்ச்சை எழும்புவதை விரும்பாத பல்கலைக்கழக நிர்வாகம், புத்தகத்தின் மீதான தடையை நீக்கிவிட்டது. இதனால் கொந்தளித்துப் போன பா.ஜ.கவினர், பல்கலைக்கழக நிர்வாகத்திடம், ' எங்கள் அரசை விமர்சித்து புத்தகம் எழுதுவார்கள். நீங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பீர்களா? மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் புகார் தெரிவிப்போம்' என தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி பிரதேச இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்திடம் பேசினோம். " மாணவர்களின் புத்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்ட தகவல் பரவியதும், ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துள்ளனர். இதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். வைடர்ஸ்டேண்ட் புத்தகத்தை மறுபதிப்பு செய்வதற்காக, கேரள பதிப்பகம் ஒன்று அணுகியிருக்கிறது. கல்வி நிறுவனங்களில் இருந்தும் வைடர்ஸ்டேண்ட் புத்தகத்தைக் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளனர். தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாகவே புத்தகத்தை விநியோகிக்க அனுமதி வழங்கினர். இதன்பிறகு மாணவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஜனநாயகரீதியாகவே போராட்டத்தைத் தொடருவோம்" என்றார் நிதானமாக.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.