' ஐ.ஐ.டி கல்வி மையங்களில், மாணவர் சேர்க்கைக்கான புதிய நடைமுறை, சமூகநீதிக்கு எதிரானது' எனக் கொந்தளிக்கின்றன அரசியல் கட்சிகள். அதே சமயம் ' வரும் காலங்களில் தரமான பொறியாளர்கள் வேண்டுமென்றால், அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி இருப்பதே நல்லது. அவர்களால்தான் கல்வியின் தரமே சீர்குலைகிறது' எனக் கொந்தளிக்கிறார் மூத்த கல்வியாளர் ஈ.பாலகுருசாமி.
இந்தியா முழுவதும் 22 ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக, ஜே.இ.இ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்.ஐ.டியில் சேருவதற்கும் இந்த நுழைவுத் தேர்வு போதுமானது. நடப்புக் கல்வியாண்டு வரையில், நுழைவுத் தேர்வு மதிப்பெண்களோடு பிளஸ் 2 மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து வந்தன ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள். ஆனால், ' அடுத்த ஆண்டு முதல் புதிய நடைமுறையைப் பின்பற்றுமாறு' உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, " மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற நாள் முதலாக உயர்கல்வித்துறை பலமுனைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
தற்போது ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கு 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டுள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். அதன்படி பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ' நுழைவுத் தேர்வுக்கே 100 சதவீத மதிப்பெண் அளிக்கப்படும்' என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தவிர, பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் என்பது 75 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 40 சதவீத மதிப்பெண்கள் என்பது 65 சதவீதமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது சமூகநீதிக்கு எதிரானது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்குக் கனவுகூடக் காணக் கூடாது என மத்திய அரசு கருதுகிறது. இதனால் நுழைவுத்தேர்வில் ஓரளவு வெற்றி பெறும் மாணவர்கள்கூட, ஐ.ஐ.டியில் சேருவது தடைபடும்" எனக் கூறியுள்ளார்.
" நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது வரவேற்கத்தக்கது. அரசியல்வாதிகள் தலையிடுவதால்தான் உயர்கல்வியின் தரமே சீர்கெடுகிறது" எனக் கொந்தளிக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் மூத்த கல்வியாளருமான ஈ.பாலகுருசாமி.
அவர் நம்மிடம், " நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை முழுமையாக எடுத்துக் கொள்வதால் என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது? இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமமாகத்தான் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கேற்ற வகையில் நன்றாகப் படித்து நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு நமது மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. தரமான கல்வியைப் பற்றி இவர்களுக்கு எந்தவிதக் கவலையும் இல்லை. பள்ளிக் கல்வியைத் தரமானதாக மாற்றாமல் அரசுகள் தொடர்ந்து தவறிழைக்கின்றன. நமது பாடத்திட்டத்தில் கோளாறுகளை வைத்துக் கொண்டு, நுழைவுத்தேர்வைக் குறை சொல்வது எந்த வகையில் நியாயமானது? ஐ.ஐ.டியையும் அண்ணா பல்கலைக்கழகம் போல மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றனர். ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் புதிய முறைகளை எதிர்த்து, அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். கல்வியின் தரத்தைப் பற்றி ராமதாஸுக்கு என்ன கவலை? ஏழைகளின் கல்வியைப் பற்றி இவர்கள் பேசுகிறார்கள். அந்த ஏழைகளுக்காக இவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?
உயர்கல்வி மையங்களில் கல்வியாளர்கள் கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி கேள்விகள் கேட்கக் கூடாது. அப்போதுதான் தரமான உயர்கல்வியை நோக்கிப் பயணிக்க முடியும். ஐ.ஐ.டி நிறுவனங்களில் தரமான கல்வியாளர்கள் இருக்கிறார்கள். எது நல்லது என அவர்கள் தீர்மானிக்கட்டும். சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு ஐ.ஐ.டி வளர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்ட நிறுவனங்களில் சேர்ந்து படித்தால்தான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். கிராமத்து மாணவர்களோ, எஸ்.சி மக்களோ படிக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தான். நமது மாணவர்களின் எதிர்காலத்திற்கு எது தேவை என்பதை எளிதாகக் கணிக்க முடியும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு நமது மாணவர்களைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. ' நீட் தேர்வு வேண்டாம்' என்றும் போராடுகிறார்கள். இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கு நமது மாணவர்கள் பயப்படுகிறார்கள். பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது. கணிதத்தில் 200-க்கு 200 மார்க் எடுக்கும் மாணவன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் செமஸ்டரிலேயே பெயில் ஆகிப் போவதை நான் பார்த்திருக்கிறேன். தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை எதிர்க்கவே கூடாது. அப்படி எதிர்த்தால், ' தரமான மாணவர்கள் உருவாகக் கூடாது' என அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.
சர்வதேச அளவில் நமது மாணவர்கள் சிறந்து விளங்கும் வகையில், வகுப்பறைகளிலும் தேர்வு முறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மத்திய பாடத்திட்டத்தைவிட அதிக தரமானதாக பள்ளிக்கல்வியை மாற்ற வேண்டும். உண்மையில், பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஐ.ஐ.டிக்கு பத்து மாணவர்கள் போவது பெரிய விஷயமல்ல. அதற்கேற்ப தரமானவர்களாக அவர்கள் வெளியில் வர வேண்டும். ஐ.ஐ.டியை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது, வீட்டைவிட்டு ஓடிப் போவது என அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்த பின்னர்தான், அதன் தரத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். ' தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டோம்' என தி.மு.கவும் அ.தி.மு.கவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. இதனால் தரமான பொறியாளர்களை உருவாக்க முடிந்ததா? பொறியியல் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ததன் விளைவுதான், தெருவெங்கும் பொறியாளர்களைப் பார்க்க முடிகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி, எஸ்.டி என தகுதியான மாணவர்கள் எந்த இடத்தில் இருந்து வந்தும் பொறியியல் படிக்கட்டும். அதைவிட்டுவிட்டு ஜனநாயகம், சமூகநீதி என்று பேசியே கல்வியின் தரத்தை சீரழிக்கிறார்கள்" என்றார் ஆவேசமாக.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.