லஞ்சம் வாங்கிக் கொண்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவர்களை, அங்குப் பணி புரிந்த ஊழியர்களே தப்பிக்க வைத்த அவலம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இயங்கி வருகிறது சிறுவர் கூர்நோக்கு இல்லம் ஒன்று. குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்குக் குறைவானவர்களை இங்கு பாதுகாப்பாக அடைத்து வைப்பது வழக்கம். அதேசமயம், அவ்வளவு பாதுகாப்பு இருந்தபோதும், இங்கிருக்கும் சிறுவர்கள் அடிக்கடி தப்பிச் செல்வது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
அப்படி, சில தினங்களுக்கு முன் தப்பிச் சென்ற 17 வயது சிறுவன் ஒருவன், இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் காவல்துறையினரிடம் சிக்கினார். பின்னர் அவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். ஆனால், கடந்த ஜூன் மாதம் இரண்டாவது முறையாக மீண்டும் அங்கிருந்து தப்பித்து சில திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் சிக்கியதால் மீண்டும் கூர்நோக்கு இல்லத்திலேயே அந்தச் சிறுவன் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் சுவற்றில் இருந்த பல்லிகளைத் தின்று அச்சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, மருத்துவமனை வாசலிலேயே தங்களைத் தாக்கிவிட்டு அவர் தப்பித்துவிட்டதாக கூர்நோக்கு இல்ல ஊழியர்கள் தெரிவிக்கவே, அச்சிறுவனை தேட தொடங்கியது காவல்துறை.
அந்தச் சிறுவனைக் கைது செய்து ரகசியமாக விசாரணை நடத்தியபோது அச்சிறுவன் கூறிய பல தகவல்களை கேட்டு காவல் துறையினரே அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அந்த விசாரணையில், ''ஒவ்வொரு முறையும் நான் தப்பிக்க காப்பாளர், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் ரூ.10,000 தர வேண்டும். அப்படி சொல்லித்தான் அவர்கள் என்னைத் தப்பிக்க விடுவார்கள். நான் அப்படித் தப்பிச் சென்றபின், திருட்டுகளில் ஈடுபட்டு அதில்வரும் பணத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்" என்று கூறி இருக்கிறார்.
இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தத் தகவல் அடிப்படையில் காப்பக ஊழியர்களைப் பொறி வைத்துப் பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, மீண்டும் அந்த சிறுவனை வழக்கம்போல கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அத்துடன் அந்த கூர்நோக்கு இல்லத்தைச் சுற்றி முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராவைப் பொறுத்தினர். இது தெரியாமல், காவல்துறையினர் தங்களைச் சந்தேகப்படுவதை அறிந்ததும் கூர்நோக்கு ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நால்வர் சுற்றி நிற்க அந்தச் சிறுவனே ஜன்னல் கம்பிகளைத் தகர்த்து தப்பிச் செல்வதுபோல மொபைல் போனில் வீடியோ எடுத்திருக்கின்றனர். இது அனைத்தும், அந்த ஊழியர்களுக்குத் தெரியாமல் காவல்துறையினர் பொருத்திய சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்திருக்கிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சிறார் குற்றவியல் குழுமத் தலைவர் தனலட்சுமி, கூர்நோக்கு இல்லத்தைப் பார்வையிடச் சென்றபோது சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆராய்ந்திருக்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த சிறுவனைத் தப்ப விடுவதும், அதை மொபைல் போனில் வீடியோ எடுப்பதும் அதில் தெளிவாகப் பதிவாகி இருந்திருக்கிறது. அதன்பிறகு அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து காப்பாளர் ராஜவேலு, நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன், சமையல்காரர் சுரேஷ், காவலாளி குப்புசாமி ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவறான பாதையில் செல்லும் சிறுவர்களை நெறிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதுதான் இது போன்ற கூர்நோக்கு இல்லங்கள். ஆனால் அவை, மன தடுமாற்றத்தில் வரும் சிறுவர்களைத் தொழில் முறைக் குற்றவாளிகளாகச் சமீபகாலமாக உருவாக்கி வருவது வேதனை அளிக்கக்கூடிய விஷயம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.