Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 12, 2016

அத்துமீறல்: இந்திய அமைச்சரை எச்சரித்த ஒலிம்பிக் கமிட்டி!


இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலின் அத்துமீறல் நடவடிக்கையால், அவரது ஒலிம்பிக் பார்வையாளருக்கான அங்கீகார அட்டையை ரத்து செய்து விடப்போவதாக ரியோ ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்துள்ளது.

ரியொவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியை  காண விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், தனது பரிவாரங்கள் சிலருடன் சென்றுள்ளார். அங்கு அவர் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அவசியமின்றி அடிக்கடி சென்றுள்ளார். இது தெரியவந்தபின் ஒலிம்பிக் ஆர்கனைசிங் கமிட்டி பல முறை அவரை எச்சரித்தது. அவர் கேட்கவில்லை போலும். இந்தியாவில் இருப்பதைப்போன்ற நினைப்பிலேயே தொடர்ந்து அங்கு நடமாடியிருக்கிறார். இந்த அத்துமீறலால் ரியோ ஒலிம்பிக் ஆர்கனைசிங் கமிட்டி, விஜய் கோயலின் அடையாள அட்டையை பறித்து விடுவோம் என எச்சரித்துள்ளது.

இது குறித்து ஒலிம்பிக் ஆர்கனைசிங் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஷாரா பீட்டர்சன் இந்தியக் குழுத் தலைவரான ராகேஷ் குப்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், '' உங்கள் அமைச்சர் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அங்கீகாரமில்லாத தனிநபர்களுடன் அடிக்கடி புகுந்துவிடுவதாக புகார் வருகிறது. பாதுகாவலர்கள் தடுத்தால் முரட்டுத்தனமாக நடப்பதாகவும் சில நேரங்களில் பாதுகாவலர்களை நெட்டித் தள்ளுவதாகவும் சொல்லப்படுகிறது.

இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று கூட ஜிம்னாஸ்டிக் மைதானத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இனிமேல், இது தொடர்ந்தால் உங்கள் விளையாட்டு அமைச்சரின் அடையாள அட்டையை ரத்து செய்ய நேரிடும். ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்படும்.  எங்களுக்கு வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். தகவலை உங்கள் அமைச்சருக்கு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம்'' என கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை கடிதத்திற்குப்பின் ஒலிம்பிக் கிராமத்தில் அமைச்சர் இருக்கும் இடம் தெரியவில்லையாம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.