Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்கள்


மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தி சென்னையில் நேற்று  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான தடையை நீக்குவதைவிட மத்திய அரசுக்கு வேறு பல முக்கியமான பணிகள் இருப்பதாகவும் தமிழகத்தில் வெகு சிலரே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வேண்டுமென கூறுவதாகவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை மதிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுடன் பொங்கல் விழா நடக்குமென தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் யார் சொல்வதையும் கேட்கும் நிலை தமிழக மக்களுக்கு இல்லையென்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் மேனகா காந்தி பேசியது அவரது சொந்தக் கருத்து என தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி தடை விதித்தது.

இதற்கிடையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வகை செய்யும் விதத்தில், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, மத்திய அரசு இந்த ஆண்டுத் துவக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் தடை உத்தரவைப் பெற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.