Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 19, 2016

’மிஸ் யூ மச்சிலி’ - சோகத்தில் ராஜஸ்தான் டூரிஸம்!


உலகின் அதிகமான போட்டோகிராபர்களின் கேமராக்களில் சிக்கிய பெருமை ‘மச்சிலி’க்கு உண்டு. அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு, வருடத்துக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் 60 கோடி) வரை சம்பாதித்துக் கொடுத்ததும் மச்சிலிதான். அப்படிப்பட்ட மச்சிலி, இன்று தனது கடைசி மூச்சை நிறுத்தி விட்டது. மச்சிலி வேறு யாருமில்லை; ஜெய்ப்பூரின் ராந்தம்போர் டூரிஸம் ஸ்பாட்டில் உள்ள பெண் புலி.

மச்சிலி என்றால் இந்தியில் மீன் என்று அர்த்தம். மச்சிலியின் முகத்தை மூன்று நிமிடங்களுக்கு உற்றுநோக்கினால், அழகிய மீனை நினைவுபடுத்தும். மச்சிலியின் முக வரிகள்தான் ராந்தம்போர் தேசியப் பூங்காவின் முகவரி. மச்சிலிக்கு இப்போது வயது 20. டூரிஸ்ட் ஸ்பாட்டுக்காகவே தன்மையாக வளர்க்கப்பட்டதால், காட்டில் திரியும் புலிகளிடம் இருக்கும் வேட்டைத்தனம் மச்சிலியிடம் இருக்காது. ‘மச்சிலி, ஏக் போட்டோ தஸ்வீர் லூங்கா’ என்று இந்தியில் சொன்னால், சட்டென போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் திறன், மச்சிலியின் ஸ்பெஷல்!

ராந்தம்போர் நேஷனல் பார்க் என்னும் ஃபேஸ்புக் வலைதளமே மச்சிலியின் மறைவுக்கு அழுது தீர்க்கிறது. ‘‘நான்கு நாட்களாகவே மச்சிலி சரியாகச் சாப்பிடவில்லை. ஏதோ நோய்வாய்ப்பட்டதுபோல் தெரிந்தது. காட்டின் மூலையில் படுத்தபடியே இருந்தது மச்சிலி. சந்தேகம் வந்து, மருத்துவர்களை வைத்து எவ்வளவோ போராடிப் பார்த்தோம். மச்சிலி இறந்தது ராந்தம்போருக்கே மிகப் பெரிய சோகம்!’’ என்று சோகமாகச் சொல்கிறார் புலி வனச் சரக இயக்குநர் யோகேஷ்குமார்.

பொதுவாக, பெங்கால் புலிகளின் ஆயுள் 12 முதல் 15 வருடங்கள் வரைதான். ஆனால், மச்சிலி தனது 20-வது வயதில் இறந்தது இயற்கையான மரணம்தான் என்று லேசாக ஆறுதல் அடைகிறார்கள் விலங்கு நல ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.