Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 12, 2016

மொழியிலும் விவசாயிகளுக்கு வஞ்சனை!- 'கிஸான் சுவிதா'வில் தமிழ் இல்லை


விவசாயம் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு, மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'கிஸான் சுவிதா' செல்போன் செயலியில், தமிழ்மொழி இல்லாதது, விவசாயிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.

தினசரி காலநிலை, மழை அளவு, பருவநிலை மாற்றம், விளைபொருட்களின் சந்தை விலை உள்ளிட்ட விபரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள, மத்திய அரசு, 'கிஸான் சுவிதா' என்ற பெயரில், மொபைல் போன் செயலியை உருவாக்கியது. 'ஸ்மார்ட் போன்' வைத்திருக்கும் விவசாயிகள், 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து 'கிஸான் சுவிதா' ஆப்ஸை, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம், விவசாயிகள், தங்களுக்கு தேவையான விபரங்களை, உடனுக்குடன் பெற முடியும்.

ஆனால் இத்தகைய வசதி கொண்ட செயலி தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. காரணம் தமிழில் தகவல் பெறும் வசதி இல்லாததே.

இப்போது, விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை தகவல்களான மாவட்ட நிலவரம், தட்பவெப்ப நிலை, மழை அளவு, ஈரப்பதம், காற்றின் வேகம், காலநிலை, மழையளவு, பருவநிலை மாற்றம், விளைபொருள்களின் சந்தை விலை விவரங்கள், பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு செய்திகள் ஆகிய விவரங்களை அறிய வேளாண் மற்றும் அத்துறை சார்ந்த அலுவலர்களையே நேரில் சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது.

இதனால் அலைச்சலும், கால விரயமும் ஏற்படுவதால் போதிய தகவல்களை விவசாயிகள் உடனுக்குடன் பெற இயலாமல் விவசாயத்தில் நட்டத்தை சந்திக்கும் நிலை இருந்து வருகிறது. இதைத் தவிர்த்து விவசாயிகளுக்கு உடனடியாக தகவல்கள் கிடைக்கும் வகையில்தான் மத்தியஅரசு 'கிஸான் சுவிதா' செயலியை உருவாக்கியுள்ளது. ஆனால் இத்தகைய வசதியை தமிழக விவசாயிகள் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டிருப்பது சோகம்.



இப்போது தகவல்கள் ஆங்கிலம், ஹிந்தி மொழியில் அளிக்கப்படுகிறது. விரைவில் தமிழிலும் தகவல்கள் வழங்கப்பட உள்ளது என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுவரை தமிழ்மொழி இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.