காமராஜர் சாலை, கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சோதனைக்கு பின்னரே கோட்டை ஊழியர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 17-ம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ததகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றபோது, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வான குணசேகரன் தன் பேச்சின் போது, "நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது" என்று குறிப்பிட, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்து தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார். அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் நீண்ட நேரமாக குரல் கொடுக்க, அவர்களை அவையைவிட்டு கூண்டோடு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 79 பேரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து அறிவித்தார்.
இதை கண்டித்து கடந்த 18-ம் தேதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவை நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 19-ம் தேதி அன்று தலைமை செயலக வளாகத்தில் உள்ள மரத்தடியில், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் சபாநாயகர் போல் அமர்ந்து போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில், 18-ம் தேதி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்றதாக மு.க.ஸ்டாலின் உள்பட 40 மீதும், 19-ம் தேதி அனுமதியின்றி போட்டி சட்டப்பேரவைக் கூட்டம் கூடியதாக மு.க.ஸ்டாலின் உள்பட 60 பேர் மீதும், அனுமதியின்றி கூடுவது (இந்திய தண்டனை சட்டம் 143) ஏதாவது ஒரு நோக்கத்துடன் செயல்படுவது (188) ஆகிய இரண்டு பிரிவுகளில் 2 வழக்குகளை கோட்டை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சபாநாயகர் உத்தரவை மீறி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்துக்கு செல்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அறிவித்து உள்ளார். அதன்படி இன்று மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தால் பிரச்னை ஏற்படும் என்று கோட்டை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும், காலை 7.30 மணி முதல் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ரிசர்வ் வங்கி வரை காமராஜர் சாலையின் இரு பக்கங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். நெச்சிக்குப்பம், விவேகானந்தர் இல்லம், கன்னகி சிலை, எழிலகம், சென்னை பல்கலைக்கழகம், நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம், கோட்டை நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்லும் வயில், ரிசர் வங்கி சந்திப்பு என்று ஒவ்வொரு முக்கிய சந்திப்புகளிலும் பேரிகார்ட் போடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
கோட்டை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முதல்வர், அமைச்சர்கள், ,எம்.எல்.ஏ.க்கள். என கோட்டை நுழைவு வாயில் மூன்று வகை பாதையாக பிரிக்கபப்ட்டு உள்ளது. கோட்டைக்கு வரும் ஊழியர்கள் அனைவரிடமும் ஐ.டி. கார்ட்டை போலீசார் கேட்டு வாங்கி பார்த்து அதன்பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். ஒரு பத்திரிகைக்கு ஒரு நிருபர், ஒரு புகைப்படக்கலைஞர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வாரப் பத்திரிகை நிருபர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா சரியாக காலை 9.45 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உள்துறைச் செயலர், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முன்னதாக காலை 9.30 மணிக்கு பூங்கோதை, கே.என் நேரு, ஒரத்தநாடு ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.கே.மோகன், காந்தி, கே.வி.சேகரன் கோட்டைக்கு வந்தார்கள். இவர்கள், 4-ம் எண் கேட் வழியாக ஐடி கார்டை காட்டிவிட்டு வளாகத்திற்குள் சென்று வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தனர். மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தி.மு.க. உறுப்பினர்கள் வேறு யாரும் உள்ளே சென்றுவிடக் கூடாது என்பதற்காக அங்கே 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாளிகை அருகே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது. ''இங்கே போடப்பட்டுள்ள போலீஸ் பந்தோபஸ்தை பார்த்தீர்களா, இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவையா?. அரசு ஊழியர்களைகூட வேலை செய்ய விடவில்லை. பொதுமக்களும் கடுமையான கெடுபிடிக்கு பின்னரே கோட்டைக்குள் அனுமத்திக்கப்படுகின்றனர். இதற்கு பயந்து கொண்டு பலர் திரும்பி சென்றுள்ளனர். இதற்கெல்லாம் நீங்கள் தான் நியாயம் கொடுக்க வேண்டும். எங்களை மிரட்டுகிறார்கள், நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்" என்றார்.
முன்னாள் அமைச்சர் பூங்கேதை கூறும்போது, ''மக்கள் பிரச்னையை சட்டப்பேரவையில் எழுப்புகிறோம். இன்று முக்கியமான போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. எங்கள் தலைவர் காவல்துறை பற்றி பல அறிக்கை விட்டுள்ளார். இது தொடர்பாக நாங்கள் பேசி அது மக்களுக்கு தெரிந்துவிட்டக் கூடாது என்பதால் இப்படி செய்கிறார்கள். அ.தி.மு.க. அரசின் அராஜகத்தை கண்டித்து இன்று வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார்.
காந்தி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நாங்கள் பேரவையில் பேச அனுமதி கேட்டோம். அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். மேலும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பேரவையில் இன்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. இது மக்கள் மன்றமா, அ,.தி.மு.க. மன்றமா என்று தெரியவில்லை. அதனால் எங்கள் கண்டனத்தை அங்கே தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும்போது, முதல்வர் ஜெயலலிதா உரையாற்றும் அன்றும் காமராஜர் சாலை முழுவதும் அ.தி.மு.க.வினர் பேனர், கட்-அவுட்கள் வைப்பதுடன் வழிநெடுகிலும் நின்று முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பார்கள். ஆனால் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் நாளில் எங்கும் அ.தி.மு.க.வினரை காணமுடியவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.