Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 29, 2016

வளிமண்டல ஆக்சிஜன் மூலம் இயங்கும் ராக்கெட் என்ஜின்! - இஸ்ரோ பரிசோதனை வெற்றி


ஸ்ரீஹரிகோட்டா: வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இயங்கும் இஸ்ரோவின் புதிய ராக்கெட் என்ஜின் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. இதன்மூலம், விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.

வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு பறக்கும் இஸ்ரோவின் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜினை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்தனர். 3 ஆயிரம் கிலோ எடையுடன் கொண்ட இந்த ராக்கெட் என்ஜினில் 7 வினாடிகளில் திரவ ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் எரியூட்டப்பட்டு நடத்தப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி சிவன் கூறுகையில், ''வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ராக்கெட் ஏவப்பட்ட 55வது விநாடியில் சோதனை வெற்றிப்பெற்றது. 7 விநாடிகளில் திரவ ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எரியூட்டப்பட்டது. ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எரியூட்டப்பட்ட நிகழ்வு எதிர்பார்க்கப்பட்ட 5 விநாடிகளை காட்டிலும் அதிகம். இந்த ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி என்பது, இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்" என்றார்.

எப்பொழுதும் ராக்கெட்கள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக ராக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள டாங்கிகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து அனுப்பப்படும். ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி, வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இத்தகைய ராக்கெட் என்ஜின்கள் பறக்கும், எடை குறையும், திறன் அதிகரிக்கும். இதன்மூலம் விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போதைய நிலவரப்படி, ஒருகிலோ எடை கொண்ட பொருளை விண்ணில் செலுத்த 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிவரும் நிலையில், இன்றைய பரிசோதனை இஸ்ரோவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது நாடு என்ற பெருமையை இன்றைய சோதனையின் மூலம் இந்தியா பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.