Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 13, 2016

தவறான தகவல் தரப்பட்டதாக பயணி புகார்: ஐஆர்சிடிசி ரூ.7,000 இழப்பீடு வழங்க மும்பை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


இந்திய ரயில்வே துறை சார்பில், பயணிகளுக்கான இணைய வழி முன்பதிவு மற்றும் பயணச் சீட்டு வினியோகம் உள்ளிட்ட பணிகளை அதன் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே உணவு தயாரிப்பு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மேற்கொண்டு வருகிறது.

மும்பையைச் சேர்ந்த கோபால் பங்கட்லால்ஜி பஜாஜ் என்பவர், 2013 மே 5-ம் தேதியன்று அமராவதியில் இருந்து மும்பை செல்வதற்காக, நாக்பூர் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலமாக, முன்பதிவு செய்துள்ளார்.

இணையம் மூலமாகவே ரூ.300 செலுத்தி, பயணச் சீட்டு பெற்றார். கைபேசியில் குறுஞ்செய்தி வாயிலாக, பிஎன்ஆர் எண்ணும் ஐஆர்சிடிசி இணைய தளத்தில் இருந்து வரப்பெற்றார்.

பயணச் சீட்டில் குறிப்பிட்டிருந்த படி, இரவு 7.40 மணிக்கு அமராவதி ரயில் நிலையத்தில், ரயிலில் ஏறுவதற்காக பங்கட்லால்ஜி காத்திருந்தார். ஆனால், ரயில் நான்கரை மணி நேரம் தாமதமாக வரும் என அவருக்கு தெரிவிக் கப்பட்டது.

மறுநாள் குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் காரணமாக, ரூ.180க்கு முன்பதிவில்லாத பொது பயணச் சீட்டு வாங்கி மற்றொரு ரயிலில் பயணம் செய்தார். பயணத்தில் மிகுந்த சிரமத்தையும், அசவுகர் யங்களையும் அனுபவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஆர்சிடிசிக்கு புகார் அனுப்பியபோது, சம்பந்தப் பட்ட ரயில் குறித்த நேரத்தில் புறப்பட்டதாக பதில் வந்தது. பின்னர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள ஐஆர்சிடிசி தலைமையகத்துக்கு விண்ணப்பித்து விளக்கம் கேட்டார்.

அன்றைய தினம் ரயில் திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே புறப் பட்டுச் சென்றதாக ஐஆர்சிடிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தவறுக்கு பிராயசித்தமாக, பயணக் கட்டணமான ரூ.300-ஐ திருப்பி அனுப்பவும் ஐஆர்சிடிசி முன் வந்தது.

இதில் திருப்தி அடையாத பங்கட்லால்ஜி, தனக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, சட்ட ரீதியான செலவினங்கள் போன்ற அனைத்தையும் வழங்க உத்தர விடுமாறு மும்பை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நுகர் வோர் நீதிமன்றம், தவறான தகவலின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் அதற்கான வட்டித்தொகையை சேர்த்து, ரூ.7 ஆயிரத்தை பங்கட்லால்ஜிக்கு ஐஆர்சிடிசி வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.