அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் நபர்கள் கூடுதல் கண்காணிப்பு மற்றும் விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர் என்று குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒஹியோவில் பயங்கரவாத ஒழிப்பிற்கு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய நாடுகளில் இருந்து வரும் நபர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதரீதியான பயங்கரவாதம் குறித்து விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள புதிய கமிஷன் ஒன்று உருவாக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் நேட்டோ பயங்கரவாத ஒழிப்பில் அக்கறை காட்டி வருவதால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் பொருட்டு அந்த அமைப்போடு இணைந்து செயல்படுவோம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முந்தைய காலத்தில் நேட்டோ அமைப்பானது செயலற்றுப் போன ஒன்று என ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். இதனிடையே பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ட்ரம்பின் உத்திகள் மோசமானவை என ஹிலாரி கிளின்டன் விமர்சித்துள்ளார். அமெரிக்காவிற்குள் வர விரும்புவோர், மத விவகாரங்கள் மற்றும் தன்பாலின சேர்க்கையாளர் சமூகம் போன்றவற்றில் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என ட்ரம்ப் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஹிலாரி கிளின்டன், இன்டியானா மாகாணத்தில் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு எதிரான மசோதாவை ஆதரித்த மைக் பென்ஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.