அருணாச்சல பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கலிகோ புல், இடாநகரில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜுலை மாதம் வரை 4 மாதங்களுக்கு அருணாச்சல பிரதேச மாநில முதல்வராக கலிகோ புல் பதவி வகித்தார். அவருக்கு 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. பின்னர் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவரது மர்ம மரணம் அருணாச்சல பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் கலிகோ புல், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த கலிகோ புல், கார்பென்டர் வேலை பார்த்தார். வறுமையினால் பகலில் சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு, இரவு நேரப்பள்ளியில் படித்தவர்.
கல்லுரியில் படித்தபோது அவருக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. கல்லுாரியின் யூனியன் தலைவராக இருந்தார். 1995ம் ஆண்டு தீவிர அரசியலில் காலடி வைத்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர், தனது 21 வருட அரசியல் வாழ்க்கையில் எம்.எல்.ஏ, அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.
காங்கிரஸ் கட்சியின் அருணாச்சல பிரதேச மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக 13 ஆண்டுகளும், காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினராக 7 ஆண்டுகளும் பதவி வகித்தவர். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். செஸ், பேட்மிண்டன் விளையாட்டுகளிலும் கலிகோ புல்லிற்கு ஆர்வம் அதிகம்.மானுடவியல் பட்டப்படிப்பு படித்ததாலோ என்னவோ சமூக சேவைப் பணிகளில் தம்மை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவர்.
அண்மையில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தால் முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக நேரிட்டது. இதனால் அரசியலில் ஒதுங்கியிருந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் முதலமைச்சர் நபம் துகி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.