கனடாவைச் சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பெல் மற்றும் பின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியாவும் சேர்ந்து, 5ம் தலைமுறைக்கான இணைய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.
கனடாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான பெல், ரோஜர்ஸ் மற்றும் டெலஸ் ஆகிய மூன்றும் போட்டிப் போட்டுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கான இணையதள தொழில்நுட்பத்தைப் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக பெல் நிறுவனமானது, நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.
கனடாவின் தற்போதைய சராசரி இணையதள வேகத்தைவிட ஆறு மடங்கு இணையதள வேகத்தை அளிக்கும் வகையிலான 5ஜி தொழில்நுட்பத்தை கனடாவின் மிசிசாகாவில் உள்ள பெல் நிறுவனத்தின் ஆய்வு மையத்தில் சமீபத்தில் பரிசோதித்தனர். கனெக்டிவிட்டி பிரச்னைகள் பெரிய அளவில் 5ஜியில் குறைக்கப்படும் என உறுதி அளிக்கிறார்கள் பெல் நிறுவனத்தினர். அப்போது அலைக்கற்றை 73 GHz ஆகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தங்களின் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாகவும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பெல் நிறுவனம், 'இந்த ஆராய்ச்சியானது அடுத்த தலைமுறைக்கான இணையதள வேகத்தை உறுதி செய்யும் NGMN கூட்டமைப்பின் குறிக்கோள்களை 2020ம் ஆண்டுக்குள் அடைந்திட வழி வகுக்கும்' என தெரிவித்துள்ளது.
இன்னும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதால், இந்த 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது. இந்தியாவில் 2ஜிக்கும் 3ஜிக்கும், 3ஜிக்கும் 4ஜிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாத நிலையிலேயே பயன்படுத்தி வரும் நமக்கு இது அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக, எப்படியும், நம்ம ஊருக்கு 2040-க்குள் 5ஜி வந்துவிடும் என்பதால், நம்பிக்கையோடு காத்திருப்போம் மக்களே!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.