August 16, 2016
கர்ப்பிணிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யபட்டதாக குற்றச்சாட்டு!
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு மருத்துவரின் அலட்சியத்தால் தவறான அறுவை சிகிச்சை செய்யபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி, குறிஞ்சிபாடியை சேர்ந்த பாட்சா என்பவரின் மனைவி மங்கையர்கரசி பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பின்பு, ஒரு வாரத்திற்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இருந்து சீழ் வடிந்து வலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் உள்ள குறிஞ்சிபாடி மருத்துவமனையில் பரிசோதித்த போது, அறுவை சிகிச்சையில் கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், சிகிச்சை செய்த அதே மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். அங்கு சென்று விசாரித்த போது, மருத்துவரின் அலட்சியத்தால் மங்கையர்கரசிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மங்கையர்க்கரசி, கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த முதல்நாளில் இருந்தே அனைத்து சேவைகளுக்கும் செவிலியர்கள், ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவித்தார். மேலும் மருத்துவரின் அலட்சியத்தால் தம்முடைய உடல் நலம் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்
கர்ப்பிணிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யபட்டதாக குற்றச்சாட்டு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.