August 10, 2016
குவைத்தில் தமிழக ஊழியர் மர்ம மரணம் - உடலை மீட்டுத்தருமாறு ஆட்சியரிடம் மனு!
குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை கோரி மனைவி கண்ணீர்மல்க சிவகங்கை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள வில்லிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மாதம் 23ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
இந்நிலையில் அங்கு தன்னை ஒட்டகம் மேய்க்க சொல்லி வற்புறுத்துவதாகவும் வீடு திரும்ப பணம் அனுப்புமாறும் மனைவி சுமதியிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இன்று காலை சுமதிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் அவரது கணவர் 3 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டதாக அவரை குவைத் அனுப்பிய ஏஜெண்ட் தெரிவித்து விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி இறந்த தனது கணவரின் உடலை குவைத்தில் இருந்து மீட்டு தரக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
குவைத்தில் தமிழக ஊழியர் மர்ம மரணம் - உடலை மீட்டுத்தருமாறு ஆட்சியரிடம் மனு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.