August 2, 2016
பாம்பு தீண்டியவர் இறுதி சடங்கின் போது உயிருடன் எழுந்து மீண்டும் உயிரிழந்த பரிதாபம்!
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப்(23), அங்குள்ள காட்டுப்பகுதியில் மரக்கட்டைகளை சேகரிக்க சென்றபோது, அவரை பாம்பு ஓன்று கடித்து விட்டது.இதை அறிந்த ஊர் மக்கள் சந்தீப்பை காப்பாற்றுவதற்காக, அங்குள்ள ஒரு மருத்துவரை அணுகியுள்ளனர்.ஆனால் அவரோ சந்தீப் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் ஊர் மக்கள் அனைவரும் இறந்தவருக்கு செய்யப்படும் சடங்குகளை செய்ய தொடங்கினர்.ஒருவர் புதைப்பதற்கு குழிதோண்ட, மற்றும் சிலர் அதற்கான சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்ய தொடங்கினர்.
அவ்வாறு செய்யும் போது சந்தீப் முணங்கியதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து, அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அவரை காப்பாற்றுவதற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் முயற்சிக்கையில், அவரின் உடல் செயலற்று கிடப்பதை பார்த்து, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, சந்தீப்பின் உடலை மருத்துவமனையில் இருந்து வாங்கிசென்ற உறவினர்கள் மீண்டும் அடக்கம் செய்துள்ளனர்
பாம்பு தீண்டியவர் இறுதி சடங்கின் போது உயிருடன் எழுந்து மீண்டும் உயிரிழந்த பரிதாபம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 02, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.