Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 11, 2016

மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?



ஆடை அணிவதும் அரைகுறையாக அணிவதும் அல்லது அறவே அணியாததும் எங்கள் உரிமை! அதைக்கேட்க நீங்கள் யார்?
 மது அருந்துவதும் அருந்தாததும் எமது உரிமை! குடிக்காதே என்று எங்களைத் தடுக்க நீ யார்?
திருமணம் செய்துகொள்வதும் செய்யாமலே சேர்ந்து வாழ்வதும் அல்லது விபச்சாரம் செய்வதும் தனிமனித உரிமை, அதில் தலையிட உங்களுக்கு ஏது உரிமை?
எனக்கு விருப்பமானதைச் செய்யவும் சொல்லவும் எழுதவும் எனக்கு முழு உரிமை உள்ளது, அது தனிமனித சுதந்திரம்! அல்லது பத்திரிகைச் சுதந்திரம்! அதை மறுக்க நீங்கள் யார்?
.என்றெல்லாம் கேள்விகளும் கோஷங்களும் எழுவதை நாம் காண்கிறோம். இந்த வாதங்களில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது? இதை நாம் ஆராய்ந்தே ஆக வேண்டும். காரணம் நாம் ஒரு சமூகமாக வாழ இது பற்றிய தெளிவு மிகமிக முக்கியம். இது தெளிவாகாத வரை தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் குழப்பமும் அமைதியின்மையும்தான் மிஞ்சும்.
 யாரும் எதுவும் செய்யலாம் அல்லது யாரும் எதையும் பேசலாம் என்ற வரம்பற்ற தனிமனித சுதந்திரம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பது தெளிவு! ஏனெனில் யாரும் யாரையும் எக்காரணமும் இன்றி கொலையும் செய்யலாம் ஏசவும் செய்யலாம், எதையும் அபகரிக்கலாம் அவற்றில் எந்தக் குற்றமும் இல்லை என்றாகி விடும். அப்படி ஒரு நடைமுறை இருக்குமானால் மனித வாழ்வே சாத்தியமற்றதாக ஆகிவிடும் என்பதை நாம் அறிவோம்.
 தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் – அதாவது பிறரை பாதிக்காதவற்றில் - தனி சுதந்திரம் இருப்பது உண்மையே. ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன.
எனவே  இந்த தனிமனித சுதந்திரத்தை எதுவரை அனுமதிக்கலாம்? அதை எவ்வாறு நிச்சயிப்பது? யார் நிச்சயிப்பது? .....இதை மனிதர்கள் அவர்களாகவே நிச்சயிக்க முடியுமா? அவரவர் மனோ இச்சைகளுக்கு ஏற்ப இதை நிச்சயித்தால் என்ன ஆகும்? இங்கும் குழப்பமே மிஞ்சும் என்பதை நாம் உணரலாம்.
அடுத்ததாக இதை தீர்மானிக்கும் பொறுப்பை ஒரு குடும்பத்திடமோ அல்லது இனம், மொழி, நிறம், தொழில், மற்றும் இன்னபிற அடிப்படையிலான சங்கங்களிடமோ குழுக்களிடமோ கட்சிகளிடமோ அல்லது ஒரு ஊர் நிர்வாகத்திடமோ அல்லது நாட்டை ஆள்பவர்களிடமோ விட்டால் என்ன ஆகும்? அதன் விளைவும் பயங்கரமானதாக இருக்கும். அன்றாடம் சண்டைகளும் பெரும் போர்களுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.