August 14, 2016
ஐதராபாத்தில் காங்கிரஸ் தலைவர் மீது துப்பாக்கி சூடு: கூலிப்படை தலைவன் தாக்குதல்
ஐதராபாத் அடுத்த போயன் பள்ளியில் காங்கிரஸ் தலைவர் யாதகிரி வசித்து வருகிறார். அவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்றபோது மர்மநபர் ஒருவர் யாதகிரி மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு அவரது இதயத்தின் கீழ் பகுதியில் துளைத்தது.
ரத்த வெள்ளத்தில் யாதகிரி ஆஸ்பத்திரிக்குள் ஓடினார். அவரை துரத்திய மர்மநபர் மீண்டும் துப்பாக்கியால் சுட்டபடி சென்றார். உடனே ஆஸ்பத்திரி கழிவறைக்குள் புகுந்து கதவை பூட்டி கொண்ட யாதகிரி பின்பக்க வழியாக சாலை பகுதிக்கு வந்தார். ஆனால் மர்ம நபர் அவரை கொலை செய்ய துரத்தியபடி வந்தார்.
அப்போது சாலையில் யாதகிரி கீழே விழுந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்து மர்ம நபர் சென்றார். அப்போது துப்பாக்கியை குப்பை தொட்டியில் வீசி சென்றார்.
சிறிது நேரத்தில் எழுந்து யாதகிரி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அங்கிருந்து ஒரு வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரை போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த துப்பாக்கி சூடு காட்சிகள் அனைத்து சி.ஜி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை போலீசார் ஆய்வு செய்தபோது யாதகிரியை சுட்டது கூலிப்படை தலைவன் தாகூர்பாபு என்பதும், யாதகிரியை கொலை செய்ய யாரோ கூலிப்படையை அனுப்பி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஐதராபாத்தில் காங்கிரஸ் தலைவர் மீது துப்பாக்கி சூடு: கூலிப்படை தலைவன் தாக்குதல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.