August 3, 2016
தொழிற்போட்டி : திமுக அதிமுகவினர் இணைந்து தாக்குதல்!
திருவள்ளூர் அருகே தொழிற்போட்டி காரணமாக தனியார் கண்டைனர் லாரி முணைய ஒப்பந்ததாரரை திமுக, அதிமுகவினர் இணைந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சாணார் பாளையத்தில் சத்வா என்ற தனியார் கண்டைனர் லாரி முனையம் உள்ளது. இங்கு அதே பகுதியை சார்ந்த முரளி மோகன் என்பவர் ஒப்பந்ததாரராக உள்ளார் .இந்த நிலையில் சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் பாளையம் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கும்பல் கண்டைனர் முனையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அலுவலக கண்ணாடிகளை உடைத்து நொறுக்கிவிட்டு ஒப்பந்ததாரர் முரளி மோகனை கடுமையாக தாக்கிய அவர்கள் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்தால் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த முரளி மோகனை சக ஊழியர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தொழிற்போட்டி : திமுக அதிமுகவினர் இணைந்து தாக்குதல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.