August 24, 2016
ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கதுறை சம்மன்!
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பியுள்ளது.
கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாராதா சிட்பண்ட் நிறுவனம் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை பெற்று விட்டு திரும்ப செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதில் மேற்வங்காள அமைச்சர்கள் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 6வது துணை குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பியுள்ளது. சாரதா சிட் பண்ட் நிறுவனத்துடன் உள்ள தொடர்பு குறித்து நேரில் விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்திற்கு அமலாக்க துறை உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கதுறை சம்மன்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.