August 7, 2016
அதானிக்கு லாபமென்றால் மோடி அரசு எதையும் செய்யும் - கருணாநிதி
அதானி, ராம்தேவ் போன்றோரின் பெரு நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்க மத்திய அரசு உதவி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், தனியார் நிறுவனங்களின் அதிக லாபத்திற்கு உதவி செய்யும் வகையில், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் மீதான உள்ளூர் வரியை நீக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு யோசனை கூறியிருப்பதை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறைச்செயலாளர் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதை கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு விலை உச்ச வரம்பு நிர்ணயிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பொருள்கள் மீதான உள்ளூர் வரியை மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்றும், அப்போதுதான் நுகர்வோருக்கு நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். அதானிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மத்திய மோடி அரசு எதையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் என்றும் கருணாநிதி கூறியுள்ளார
அதானிக்கு லாபமென்றால் மோடி அரசு எதையும் செய்யும் - கருணாநிதி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.